பிச்சைக்காரன் 2 ஆடியோ உரிமையை வாங்கியது சரிகம சவுத் நிறுவனம் வாங்கியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி பிச்சைக்காரன் 2ம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. பிச்சைக்காரன்-2 படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
அண்மைச் செய்தி : தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பட வெளியீடு குறித்த அப்டேட் இருக்கும் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி வெளியிட்டார். இந்நிலையில், பிச்சைக்காரன் 2 ஆடியோ உரிமையை சரிகம சவுத் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த தகவலை விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.