முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

பெண்களின் திருமண வயது 21, அப்போ ஆண்களுக்கு?

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் படி பெண்களுக்கு திருமண வயது 18-ஆகவும், ஆண்களுக்கு திருமண வயது 21 ஆகவும் தற்போதுவரையுள்ளது. இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2020-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பேசிய பிரதமர் மோடி, ஊட்டசத்து குறைபாட்டில் இருந்து பெண்களை பாதுகாப்பு அவர்களின் திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறு நிர்ணயம் செய்யும் வகையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த பரிந்துரைத்து மத்திய அரசிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. இந்நிலையில், சிறப்பு குழு பரிந்துரையின்பேரில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்தும் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக அமலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, இந்தியாவில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உள்ளது.

இதனால், ஆண்களின் திருமண வயது உயர்த்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரத்தில், பெண்கள் இந்த திருமண வயது உயர்வை வரவேற்ப்பதாக தெரிகிறது. இதுகுறித்து, 18 – 25 வயது உடைய பெண்களை கேட்கும்போது, “நாங்கள் நினைத்ததை, விரும்பியதை செய்ய இந்த வயது உயர்வு எங்களுக்கு உதவியாக இருக்கும் எனவும், 18 வயது ஆனவுடன் திருமணம் என்ற அழுத்தம் இனி எங்களுக்கு குறையும் என தெரிவிக்கின்றனர்”.

Advertisement:
SHARE

Related posts

அதிகரிக்கும் கொரோனா தொற்று; டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மூடல்!

Ezhilarasan

அரசு மருத்துவர்களை பாராட்டி பள்ளி மாணவர்கள் வெளிப்படுத்திய அன்பு

Gayathri Venkatesan

ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க பிரதமர் மோடி உத்தரவு!

Ezhilarasan