மறைந்த தேமுதிக தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த்-ன் இல்லத்திற்கு நடிகர் சூரி நேரில் சென்று, அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நினைவிடத்திற்கு பொதுமக்கள் மட்டுமல்லாது, இறுதி ஊர்வலத்திற்கு வர முடியாத பல பிரபலங்களும் நேரில் வந்து தற்போது அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அந்த வகையில், தற்போது நடிகர் சூரி இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.







