தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆதரவு!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கட்சித் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தல்தான் தங்கள் இலக்கு என தெரிவித்தார். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து, தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது தவெக. தேர்தல் பிரச்சார…

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கட்சித் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தல்தான் தங்கள் இலக்கு என தெரிவித்தார். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து, தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது தவெக.

தேர்தல் பிரச்சார பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம் செய்யப்பட்டார். சமீபத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரிடம் தவெக தலைவர் விஜய் கலந்தாலோசித்தார். தொடர்ந்து தேர்தலுக்கான யுக்திகளை தவெக வகுத்து வருகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தையை தவெக தொடங்கி உள்ளது. தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கூட்டணியில் இணைவதாகவும் அறிவித்துள்ளார்.

தவெக எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது, தனித்து போட்டி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.