முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்சினிமா

மாமன்னன் திரைப்பட சமூக நீதி அரசியலை மேற்கோள்காட்டி வாழ்த்திய விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி!- உதயநிதி ஸ்டாலின்

மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, படத்தில் பேசப்பட்டுள்ள சமூக நீதி அரசியலை மேற்கோள்காட்டி வாழ்த்திய வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு படக்குழு சார்பில் நன்றி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்த படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாமன்னன் படத்தை வெளியிடுவதற்கு முன் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் இருந்து வந்தது. மேலும் தேனி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் படம் வெளியான பிறகும் படத்தை வெளியிட கூடாது என்று போராட்டமும் நடந்தது. ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மாமன்னன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கும், கதாநாயகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் பாராட்டு தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

சமூகநீதிக்கும் சாதிஆதிக்க வெறிக்கும் இடையிலான கரடுமுரடான முரண்களை விவரிக்கும் கலைச்சித்திரமே இயக்குநர் மாரிசெல்வராஜ் அவர்களின் மாமன்னன். சாதி ஒரு கருத்தியலாக மட்டுமின்றி; அது ஒரு கலாச்சாரமாகவும் வலுவடைந்து கெட்டித்தட்டிக் இறுகிக் கிடக்கிறது. அதனைத் தகர்ப்பது என்பதைவிட; தளர்வுறச் செய்வதே ஒரு பெரும் போராகும். அப்போரினை குருதிக் களத்தில் விவரிப்பதே மாமன்னன்.

இறுதியில் சமூகநீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரை இலக்கியமே மாமன்னன். சபையின் நாயகமாக சமூகநீதியை அமர வைக்கும் அதிவீரனின் மாபெரும் வெற்றியே மாமன்னன். அன்பு இளவல்கள் மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். பாராட்டுகள்.” இவ்வாறு பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், திருமாவளவனின் இந்த பதவிற்கு நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, படத்தில் பேசப்பட்டுள்ள சமூக நீதி அரசியலை மேற்கோள்காட்டி உள்ளன்போடு வாழ்த்திய வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு படக்குழு சார்பில் என் அன்பும், நன்றியும் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

விம்பிள்டன் டென்னிஸ்: நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி!

EZHILARASAN D

உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும்: இந்திய தூதரகம்

EZHILARASAN D

ஆட்டத்தைத் தொடங்கிய கந்தசாமி ஐபிஎஸ்

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading