முக்கியச் செய்திகள் சினிமா

“எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி விஜய் அண்ணா” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

“எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி அண்ணா” என நடிகர் விஜய்-க்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம்-2 படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் காத்துள்ளனர். மேலும் லியோ படத்தின் ப்ர்ஸ்ட் ப்ரொமோ வீடியோவை வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய் லோகேஷூக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் லோகேஷ் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி அண்ணா” என நடிகர் விஜய்-க்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்து டிவிட் செய்துள்ளார்.
 மேலும், திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அவர்களுக்கும் லோகேஷ் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், இதற்கு  எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் போதுமானதாக இருக்காது. அனைத்து மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மற்றும் அனைத்து மாஷ்அப்கள், வீடியோக்கள், ரசிகர்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இது என்னை அதிக பொறுப்பாக்குகிறது. மேலும் மக்களை மகிழ்விக்க என்னையே அர்ப்பணிப்பேன். அனைவருக்கும் நன்றி, என தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போதை மருந்து கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை

Halley Karthik

“மை – எந்த பிரச்னையுமில்லை” – அதிமுக புகாருக்கு தேர்தல் அலுவலர் சிவக்குமார் பதில்!

Syedibrahim

ரஷ்யா மீது பொருளாதாரத்தடை அறிவிப்பு

Halley Karthik