பாராலிம்பிக்கில் ‘தங்கம்’ வென்ற ‘தங்கம்..’ – யார் இந்த #AvaniLekhara?

பாராலிம்பிக்கில் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியி அவானி லேகாரா இரண்டாவது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ள நிலையில் அவர் யார் என்பது குறித்து விரிவாக காணலாம். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு…

'Thangam..' who won 'Gold' in Paralympics - Who is this #AvaniLekhara ?

பாராலிம்பிக்கில் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியி அவானி லேகாரா இரண்டாவது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ள நிலையில் அவர் யார் என்பது குறித்து விரிவாக காணலாம்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன்படி 33 வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரம்மாண்ட விழாவுடன் ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கியது.

இந்த போட்டியில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளன. இந்த பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் பாரா ஒலிம்பிக் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை அவனி லேகாரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதேபோல துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்திய அணி இரண்டு பதங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

யார் இந்த அவனி லேகாரா ?

  • அவனி லெகாரா நவம்பர் 8, 2001 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்தார்.
  • அவரது வாழ்க்கையில் 2012ம் சோகமான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. ஒரு கார் விபத்தில் அவனி லேக்காராவின் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதன் விளைவாக பக்கவாதம் ஏற்பட்டது.

    இந்த விபத்து நடைபெற்ற போது அவனி லேகாராவுக்கு 12 வயது
  • விபத்து மற்றும் பக்கவாதத்தால் வாழ்க்கை முடங்கிப் போனாலும் அதனை எதிர்த்து களமாட முடிவு செய்தார் அவனி. பாரா-ஷூட்டிங்கில் தனக்கு இருந்த ஆர்வத்தை கூர் தீட்டி தனது பலகீகனத்தையே பலமாக மாற்றினார்.

    கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் டோக்கியோவில் 2020ல் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனை படத்தார்.
  • இந்த நிலையில்தான் தற்போது 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டாவது தங்கம் வென்ற பெண் என்கிற சாதனையை படைத்துள்ளார்.



சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.