#Thalapathy69 பட பூஜை வீடியோ: படப்பிடிப்பு எப்போது? – அப்டேட் கொடுத்த படக்குழு!

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 69’ படத்தின் பூஜை குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பு தொடக்கம் குறித்தும் படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய்யின் கடைசிப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார்.…

#Thalapathy69 | Film Pooja Video: When will the shooting start? - Updated crew!

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 69’ படத்தின் பூஜை குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பு தொடக்கம் குறித்தும் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய்யின் கடைசிப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை கே.வி.என். புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். ‘தளபதி 69’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ள, கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.

அதன்படி, இப்படத்தில் நடிகர் பாபி தியோல், நடிகை பூஜா ஹெக்டே, மலையாள நடிகை மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியா மணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இணைந்ததாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை நேற்று (அக். 4) நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், இயக்குநர் வினோத் என முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்த வீடியோவை படக்குழு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் நடிக்கவுள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இந்த வீடியோவில் ‘தளபதி 69’ படப்பிடிப்பு இன்று (அக். 5) தொடங்கவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் பூஜையும் நேற்று (அக். 4) நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கலந்து கொள்ளவில்லை. இதற்கான பூஜைகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.