‘தலைவர் 171’ படத்திற்கான டீசர் மற்றும் பெயர் படப்பிடிப்பில் படக்குழு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி 171 படத்திற்கு ‘கழுகு’ எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், பான் இந்திய திரைப்படமாக இது உருவாகும் என்பதால், படத்தின் பெயரை ஆங்கிலத்தில் வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தலைவர் 171 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள், ரஜினியை மீண்டும் ஒரு மாஸ் லுக்கில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். தலைவர் 171 இல் ரஜினியின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று பல யூகங்கள் உள்ளன. படத்தின் ஏப்.22ஆம் தேதி படத்தின் பெயர், டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இ தனையொட்டி தற்போது டீசர் மற்றும் பெயருக்கான படப்பிடிப்பில் படக்குழு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்காக செட் அமைக்கும் பணி சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் தற்போது அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.