தென்காசி | மது இல்லாத ஆங்கில புத்தாண்டை வரவேற்ப்போம்!

தென்காசியில் மது இல்லாத ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் த்ரில் பார்க்கில் மக்கள் குடும்பத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் துவங்கியதை நாடு…

Tenkasi | Let's welcome an alcohol-free English New Year!

தென்காசியில் மது இல்லாத ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் த்ரில் பார்க்கில் மக்கள் குடும்பத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் துவங்கியதை நாடு முழுவதும் பொதுமக்கள் திருக்கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தியும், பொழுதுபோக்கு இடங்களில் இளைஞர்கள், இளைஞர்களும் சென்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

இதேபோன்று தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையின் மத்தளம்பாறை அருகே திரில் பார்க் என்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்கா அமைந்துள்ளது. இங்கு 2025ம் ஆண்டை மது போதை இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று மது போதைகளை பயன்படுத்தாமல் குடும்பங்களுடன் பொதுமக்கள் வருகை தந்து நள்ளிரவு 12 மணி அளவில் வான வேடிக்கைகளை முழங்க அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி ஆட்டம் பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டு மது போதைக்கு எதிரான உறுதி மொழிகளை எடுத்ததுடன் ஒருவரை ஒருவர் ஆறத் தழுவியுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.