முக்கியச் செய்திகள் தமிழகம்

கொல்லிமலை பகுதிகளில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தொலைபேசி கோபுரம்-அமைச்சர் மனோ தங்கராஜ்

கொல்லிமலை பகுதிகளில் எளிதாக இணையதளம், தொலைபேசி சேவைக்காக ரூ.4 கோடி மதிப்பீட்டில் தொலைபேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அரசின் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு
மின் ஆளுமை முகமையினை காகிதம் இல்லாத மின் அலுவலகம் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், வாய்ப்புகள் ஆகியவற்றில் துறை அலுவலர்களின் கருத்துக்களை அமைச்சர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் எம்.பி.ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி
சிங், எம்.எல்.ஏ பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பேட்டி:
சாமானிய மக்களுக்கு அரசின் அனைத்து சேவைகளும் காலதாமதமின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மின்-அலுவலகத் திட்டத்தை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது.

இதன்மூலம் மக்களைத் தேடி அரசு சேவைகள் உடனுக்குடன் கிடைக்கும். கோரிக்கை மனுக்களின் அன்றாட நிலவரத்தை கண்டறிந்து விரைவான சேவைகளை தரவுகளின்
அடிப்படையில் வழங்க முடியும். அரசு திட்டங்களுக்கு யார் தகுதியானவர்கள் என்ற தரவுகளை உடனுக்குடன் பெற்றிட முடியும். மேலும், இ-சேவை மையங்கள் மூலம் 200 ஆக இருந்து வந்த அரசின் சேவைகள் தற்போது 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இனி வருங்காலங்களில் படிப்படியாக அரசின் அனைத்துத் துறை சேவைகளும் இம்மையங்கள் மூலம் வழங்கப்படும்.

அரசு அலுவலகங்கள் முழுவதும் மின்- அலுவலகங்களாக மாற்றப்படும். நாமக்கல் போன்ற
வளரும் மாவட்டங்களில், படித்த இளைஞர்களுக்கு திறன்களை பயன்படுத்தி தகவல்
தொழில்நுட்ப பூங்கா அமைத்து அதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.

தமிழக அரசு அறிவித்தது போல ஸ்மார்ட் கவர்னன்ஸ் என்பதை உள்ளடக்கி இதுபோன்ற
மின்- அலுவலக திட்டங்களை இனிவரும் காலங்களில் முக்கியத்துவம் கொடுத்து
செயல்படுத்த உள்ளோம்.

இதன்மூலம் அரசு அலுவலகங்களில் காகிதங்கள் பயன்படுத்துவது குறைக்கப்பட்டு, அரசு
பணியாளர்களுக்கு அவர்கள் பணிகளை விரைந்து செய்ய முடியும். முதற்கட்டமாக,
அரசின் தலைமைச் செயலகத்தில் 3,645 பேருக்கு மின் அலுவலக பயிற்சி வழங்கி
முழுவதும் மின்மயமாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அரசின் சேவைகளை இன்னும் மேம்படுத்தி வழங்க முடியும்.
கொல்லிமலையில் எளிதான இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைக்காக 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொலைபேசி கோபுரம் அமைக்க, ஆதிதிராவிட நலத் துறைக்கு மாவட்ட நிர்வாகம் முன்வழிவு அனுப்பியுள்ளது.

இதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் டவர் அமைக்க நடவடிக்கை
எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் வெகு விரைவில் 12,525 கிராமங்கள் பைபர் நெட் மூலம் இணையதள சேவையை பெற முடியும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் விரைவில் முடிவடையும்.

தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. இத்துறை 16-வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

டிஜிட்டல் சேவைகள் வழங்குவதில் 17-வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு
தமிழகம் முன்னேறி நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது.

IT HUB என்ற திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தி, படித்த இளைஞர்கள்,
மாணவர்கள் ஆகியோரின் திறன்களை மேம்படுத்தி எதிர்காலத்தில் அவர்கள் உலக
தரத்திலான வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான திறன்களை தகவல் தொழில்நுட்ப துறை வழங்க உள்ளது.

தொழில்துறைக்கு தேவையான திறன்மிக்க பணியாளர்கள் எதிர்காலத்தில் கிடைப்பார்கள் என்றார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உறவினரை ஏமாற்றி திருடிய நபர்; அவரை ஏமாற்றிய நண்பர்கள்

EZHILARASAN D

பட்டினப்பிரவேசம்; அரசியல் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் – தருமபுர ஆதீன மடாதிபதி

Arivazhagan Chinnasamy

புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ லட்சுமிநாராயணன், என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார்

Jeba Arul Robinson