“சமந்தா குறித்த சர்ச்சை பதிவு” – அமைச்சர் #KondaSurekha-வுக்கு தெலங்கானா நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகை சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சையான சமூக ஊடகப் பதிவை, அமைச்சர் கோண்டா சுரேகா நீக்க வேண்டும் என்று தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் நடிகர் நாக சைதன்யா…

நடிகை சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சையான சமூக ஊடகப் பதிவை, அமைச்சர் கோண்டா சுரேகா நீக்க வேண்டும் என்று தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராமா ராவ் தான் காரணம் என தெலங்கானா அறநிலையத்துறை, சூற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா குற்றம் சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் சீரஞ்சிவி, ஜூனியர் என்டிஆர் என பல நட்சத்திரங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து நாக சைதன்யாவின் தந்தையான நடிகர் நாகார்ஜூனா, தனது குடும்ப உறுப்பினர்களின் கவுரவம் மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக, மாநில அமைச்சர் கோண்டா சுரேகா மீது நாம்பள்ளி நீதிமன்றத்தில் ரூ.100 கோடி கேட்டு கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமந்தா மற்றும் நாக சைதன்யா தொடர்பான சர்ச்சை பதிவை உடனடியாக அமைச்சர் சுரேகா நீக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.