‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு!

‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபல நடிகரான ஜீவா, இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஜீவாவின் 47வது படமாக உருவாகி வருகிறது. முன்னதாக ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கிய வெற்றிப்படமாக அமைந்தது.

அந்தப் படத்திற்கு பிறகு சுமார் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா – ராஜேஷ் கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் ஜீவாவின் 47வது படமாக உருவாகி வரும் நிலையில் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீஸர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.