வெளியானது ‘கோலி சோடா ரைசிங்’ இணைய தொடரின் #Teaser

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான ‘கோலி சோடா ரைசிங்’ தொடரின் டீசர் வெளியாகியுள்ளது. சேரனின் தயாரிப்பில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் எட்டு வருடங்கள் கழித்து…

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான ‘கோலி சோடா ரைசிங்’ தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.

சேரனின் தயாரிப்பில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் எட்டு வருடங்கள் கழித்து கோலி சோடா படத்தை இயக்கினார். இவர் பிரியமுடன், வனயுத்தம், தீபாவளி, நெஞ்சினிலே, சாக்லெட், ஆட்டோகிராப், காதல், காதலில் விழுந்தேன், வழக்கு எண் 18/9, உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 2014ஆம் கோலி சோடா எனும் படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படத்தில் பசங்க திரைப்படத்தில் நடித்த 4 சிறுவர்கள் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகர்களாக நடித்தனர்.

சந்தையில் மூட்டை தூக்கும் 4 சிறுவர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கும் கதையாக வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனை தொடர்ந்து, கோலி சோடா 2 தயாரானது. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது, இயக்குநர் விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்கிற இணையத் தொடரை இயக்கியுள்ளார்.

கோலி படத்தில் நடித்தவர்களுடன் நடிகர்கள் சேரன், ஷ்யாம், அபிராமி, அம்மு அபிராமி  உள்ளிட்டோர் இந்த தொடரில் நடித்துள்ளனர்.  இந்த தொடர் ஆக்சன், திரில்லர் பாணியில் உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இதன் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.