சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல்’ படத்தின் டீசர் செப்.28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் தயாரித்து வருகின்றனர்.
https://twitter.com/imvangasandeep/status/1675738689874567169
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் வெளியாக இருந்த நிலையில் தற்போது டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என இயக்குநர் தெரிவித்தார். பாடல்கள் அந்தந்த மொழிகளில் மாற்றப்பட்டு அதற்கேற்ப அதிக நேரமெடுப்பதால் இந்த தாமதமென இயக்குநர் வீடியோ வெளியிட்டு தெரிவித்தார். இந்நிலையில், ‘அனிமல்’ படத்தின் டீசர் செப்.28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/AnimalTheFilm/status/1703627510611837150?t=02UcCubCBMEuTEG0FsnmoA&s=19







