தோல் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனத்தில் 3வது நாளாக சோதனை

தோல் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.   தோல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பிரபல நிறுவனமான கே.ஹெச்…

தோல் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தோல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பிரபல நிறுவனமான கே.ஹெச் குழுமம், காலணிகள், தோல் பைகள், கையுறைகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருகிறது. மேலும், இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 2016ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த நிறுவனம் ஆண்டிற்கு சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இந்த நிறுவனம் வருமானத்தை மறைத்து சொத்துக்கள் சேர்த்ததாகவும், பல தனியார் நிறுவனங்களை தன்னுடன் இணைத்து தோல் பொருட்கள் தயாரித்து வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அதன் தொடர்புடைய 60 இடங்களில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர் நேற்று இரண்டாவது நாளாகவும் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்நிறுவனத்திற்கு சொந்தமாமன இடங்களில் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வந்த நிலையி, இன்று மூன்றாவது நாளாகவும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரிஏய்ப்பு புகாரில் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 3 நாட்கள் சோதனை நடத்தி வருவதால் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

 

மேலும் சோதனை நிறைவடைந்ததும், வருமானவரித்துறை சார்பில் இந்நிறுவனத்தில் கையாளப்பட்டுள்ள கணக்குகள் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.