தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு; இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 10,986ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்றால்…

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 10,986ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி 10,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 பேர் உயிரிழந்ததுள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த தொற்று பாதிப்பு 10,13,378 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல ஒட்டு மொத்த உயிரிழப்பு 13,205 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 79,804 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 99,246 பேருக்கு RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்த பரிசோதனை எண்ணிக்கை 2,10,56,094 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 263 பரிசோதனை மையங்கள் உள்ளதாகவும், இன்று 6,250 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், இதுவரை 9,20,369 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநிலம் முழுவதும் 4,487 தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன என்றும், இதுவரை 48 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.