”தமிழ்நாடு என்னை தத்தெடுத்துள்ளது” – LGM இசை வெளியீட்டு விழாவில் தோனி நெகிழ்ச்சி..!!

முதல் டெஸ்ட் போட்டி,  அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் மற்றும் முதல் தமிழ்படம் என சென்னையை மறக்க முடியாது என சிஎஸ்கே அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். டோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பு …

முதல் டெஸ்ட் போட்டி,  அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் மற்றும் முதல் தமிழ்படம் என சென்னையை மறக்க முடியாது என சிஎஸ்கே அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
டோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பு  நிறுவனமான தோனி  என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ரமேஷ் படத்தை இயக்கியுள்ளார். மலையாள இசை அமைப்பாளர் விஸ்வஜித் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்க சென்னை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இதனைத்தொடர்ந்து டிரைலரை வெளியிட்டு தோனி வெளியிட்டார்.  இதன் பின்ன பேசிய அவர் தெரிவித்ததாவது..

” கடந்த 2005ஆம் ஆண்டு சென்னையில் தான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினேன். அதேபோல் டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரான 224 ரன்களை இங்கு தான் எடுத்தேன். தற்போது என் முதல் படமும் தமிழில்தான். ஐபிஎல் தொடங்கிய பிறகு தமிழ்நாட்டு மக்களால் தத்தெடுக்கப்பட்டேன் என்று தான் கூற வேண்டும். இந்த படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்” என தோனி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.