தமிழ்நாட்டு விவசாயிகளின் கனவை மத்திய பட்ஜெட் நிறைவேற்றியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் சென்னை கிண்டியில் நடைபெற்றது. நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் தொழில், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள், மத்திய அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்வில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பலதரப்பட்ட மக்களின் பேராதரவை பெற்ற பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. உள்கட்டமைப்பு, கூடுதல் முதலீடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பட்டியலினத்தவரின் முன்னேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், பட்ஜெட் தாக்கலின்போது திருக்குறள், தமிழ் இலக்கியங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோடிட்டும் காட்டியது தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கிறது என்று தெரிவித்த அவர், “காவிரி – பெண்ணாறு – கிருஷ்ணா நதிகளை இணைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு விவசாயிகளின் கனவு ; இதை நிறைவேற்றியிருப்பது மத்திய பட்ஜெட்தான்” என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து காணொலி வாயிலாக உரையாற்றிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஒவ்வொரு நாளும் பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு வழங்கும் நபர்களாக உருவெடுத்து வருகின்றனர் என்று கூறினார். சுயசார்பு இந்தியா பிரதமரின் மனதுக்கு நெருக்கமானதாக இருப்பதாகவும், சுயசார்பு இந்தியாவை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன என்றும் கூறினார்.