முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 6,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதைத்தடுப்பதற்காக பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,711 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,40,145 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இன்று ஒரே நாளில் தொற்றுக்கு 19 பேர் உயிரிழந்ததையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,927 ஆக உயர்ந்துள்ளது. 2,339 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியதால் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,80,910 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் 82,202 பேருக்கு RT-PCR சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில், 2105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,67,181 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement:

Related posts

நகைகளை வைத்து பயிர் கடன்கள் பெற்ற விவசாயிகளும் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் பலன் பெறுவார்கள்! – அமைச்சர் செல்லூர் ராஜு

Nandhakumar

புதுச்சேரியை பாஜகவிடமிருந்து காப்பாற்றவேண்டும்: திருமாவளவன்

L.Renuga Devi

இன்று மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக அவசர ஆலோசனை கூட்டம்!

Saravana Kumar