இதற்காகவா இளமையை முழுவதுமாக கரைத்து தேய்த்தேன்? என்று தமிழருவி மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் தமிழருவி மணியன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், மீண்டும் அரசியல் – விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். விமர்சனங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள். ஒரு நல்லவன் அரசியலை விட்டு ஒதுங்கியிருகிறார் என்றபோது வருத்தமடைந்தார்கள், வந்துவிட்ட பிறகு மகிழ்ச்சியடைகிறார்கள். வெற்றி, தோல்விகளை மையமாக வைத்து அரசியலை நடத்த முயன்றதில்லை. என்னுடைய நோக்கம் வெற்றி பெறுவதல்ல, நல்லவர்கள் ஒன்றாக இணைந்து மாற்று அரசியலை வளர்த்தெடுக்கவே வாழ்நாள் முழுவதும் முயன்றிருக்கிறேன். பணத்தை குவிப்பதுதான் இலட்சியம் என்றால் பாதையும், பயணமும் வேறுபட்டிருக்கும்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதில்லை, என்னை மன்னித்து விடுங்கள் என்று சொன்னாரோ அன்றே முடிந்துவிட்டது. அதன்பிறகு நண்பர்களாகவே தொடர்கிறோம். ரஜினி என்ன முடிவெடுப்பார் என்பதற்கும், எனக்கும் எள் மூக்கின் முனையளவிற்கும் தொடர்பில்லை. ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். யாருக்கும் வாய்சும் கொடுக்க மாட்டார். ஒருகால் ஊடகங்கள் சித்தரிப்பதுபோல் ரஜினி உண்மையாக அரசியலுக்கு வந்தார் என்றால், தமிழருவி மணியனும் அவருடன் பயணிக்கிறார் என்றால் ஒரு வாய்ப்பு இருக்கிறது.
பாஜகவை புறந்தள்ள வேண்டும், வேண்டுமானால் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ளட்டும். மதச்சாயம் இல்லாத, சாதியை வைத்துக்கொண்டு வன்மம் கொள்ளாத கட்சிகளை இணைத்தால் இருகால் தமிழருவி இணைய வாய்ப்பு உள்ளது. 1980களிலேயே பாஜகவில் இணைய வாய்ப்பு வந்தது. அன்றே இணைந்திருந்தால் தேசிய தலைவர்களில் ஒருவராக இருப்பேன். என் வீடு, என் வாழ்க்கை என இருக்க முடியவில்லை. இதற்காகவா என் இளமையை முழுவதுமாக கரைத்து தேய்த்தேன்? என்றார்.
-ம.பவித்ரா








