இந்திய இசைக் குயிலுக்கு தமிழ் அஞ்சலி: கவிஞர் வைரமுத்து இரங்கல்

இந்திய இசைக் குயிலுக்கு தமிழ் அஞ்சலி என கவிஞர் வைரமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லதாமங்கேஷ்கர் மறைவுக்கு பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து…

இந்திய இசைக் குயிலுக்கு தமிழ் அஞ்சலி என கவிஞர் வைரமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லதாமங்கேஷ்கர் மறைவுக்கு பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவின் இசைக்குயில் பறந்துவிட்டது, இசை கிரீடத்தின் பாரத ரத்னா இன்று விழுந்து விட்டது. லதா மங்கேஷ்கரின் பெருமை என்னவென்றால், தான் வாழ்ந்த காலத்தின் மீது, தன்னுடைய இசை என்ற ஆதிக்கதை செலுத்தியது அவர் பாடியது மேட்டுக்குடிக்கு மட்டுமல்ல ஓட்டுக்குடிக்கும் என தெரிவித்துள்ளார்.

லதா மங்கேஷ்கரின் மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பு என நடிகர் அருண்விஜய் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் இசைக்குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அருண் விஜய் கூறியுள்ளார்.

https://twitter.com/i/status/1490202189939167232

லதா மங்கேஷ்கரின் இறப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ச்சியாக இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அரசு சார்பில் இன்று மாலை சிவாஜி பூங்காவில் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும், அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் மத்திய அரசிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.