’ரஷ்யா போரில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவரை உடனடியாக மீட்க வேண்டும்’- பிரதமரை நேரில் சந்தித்து துரை வைகோ வலியுறுத்தல்!

ரஷ்யா-உக்ரைன் போரில் சிக்கியுள்ள தமிழ் நாட்டு மாணவரை மீட்க வேண்டுமென்று மதிமுக எம்பி துரை வைகோ பிரதமரை நேரில் சந்தித்து வலிறுத்தியுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான போர் நடைப்பெற்று வருகிறது. இந்த போரை  முடிவிக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயன்று வருகிறார்.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த கிஷோர் சரவணன் என்கிற மாணவர் மருத்துவ கல்வி பயில்வதற்காக 2023 ஆம் ஆண்டு ரஷ்யா சென்றுள்ளார். பின்னர் கிஷோர் அங்கு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். இந்த நிலையில் கிஷோர் அவரை கட்டாயப்படுத்தி ரஷ்யா- உக்ரைன்  போரில் ஈடுபட வைப்பதாக பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தமிழ் நாட்டின் பல்வேறு கட்சியினரும் கிஷோரை தாயகம் மீட்டு வரக்கோரி வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ம.தி.மு.க. எம்பி துறை வைகோ உடனடியாக மாணவர் கிஷோர் சரவணன் ரஷ்யாவில் இருந்து மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மதிமுக எம்பி துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர், 68 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றையும் பிரதமரிடம்  அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் உடனடியாக மாணவர் கிஷோரை ரஷ்யாவில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க  வெளியூரத்துறை அமைச்சர் ஜெயசங்கரிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.