தமிழக மக்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலாவின் விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தண்டனை காலம் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, விடுதலை செய்யப்பட்ட பத்திரத்தை சிறைத்துறையினர் சசிகலாவிடம் ஒப்படைத்தனர்
இதனிடையே பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா இன்று அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டதை தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதாகக் கூறினார். சசிகலாவின் வருகையை தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டார். சசிகலா விடுதலை நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறந்ததை, அரசியலாக பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.







