இயக்குநர் விஜய் ஸ்ரீ நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான ‘பவுடர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களின் திரைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் அறிமுக இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள பவுடர் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இதில், தமிழ் சினிமாவில் முன்னணி பி.ஆர்.ஓ.-க்களில் ஒருவரான நிகில் முருகன் நடிகராக அறிமுகமாகியுள்ளார். திரைப்படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா, வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொடூர கொலைகளை செய்யும் சைக்கோ கொலையாளி மற்றும் அவரை பிடிக்கும் போலீஸ் என கேட் மவுஸ் கதை போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திரைப்பட ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







