தமிழ்நாடு சூரிய மின்சக்தி உற்பத்தியில் புதிய சாதனை படைப்பு! மின்சார வாரியம் தகவல்!

ஒரே நாளில் 5,979 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது. சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…

ஒரே நாளில் 5,979 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது.

சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது :

“தமிழ்நாட்டில் 09.08.2024(நேற்று) ஒரே நாளில் 5,979 மெகாவாட்(MW) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சாதனையான 5,704 மெகாவாட்டை (02.08.2024) மிஞ்சியுள்ளது. மேலும், 41.40 மில்லியன் யூனிட்(MU) மின்சாரம் அதிகபட்சமாக மின் கட்டமைப்பில் உட்கொள்ளப்பட்டுள்ளது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாட்டின் முதன்மையை உறுதிப்படுத்துகிறது”

என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.