முக்கியச் செய்திகள் வணிகம்

காலத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி!

டிஎம்பி எனப்படும், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, தூத்துக்குடி நகரை தலைமையிடமாகக் கொண்டு, 1921 ம் ஆண்டு ஆரம்பிக்கப்படது. (தொடக்க காலத்தில் வர்த்தகம் புரியும் செல்வந்தர்களுக்கு வங்கி சேவையை வழங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் அனைவருக்கும் வங்கி சேவையை வழங்கியது) தனியார் துறை வங்கியானாலும், நாட்டிலுள்ள பழமையான வங்கிகளில் ஒன்றாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி உள்ளது.

டிஎம்பியின் பொதுப் பங்கு வெளியீடு செப்டம்பர் 5-ம் தேதி ஆரம்பமாகிறது. செப்டம்பர் 7-ம் தேதி வரை பங்குகள் வேண்டி விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை 510 ரூபாய் முதல் 525 ரூபாய் வரை இருக்கும். பொதுப் பங்கு வெளியீட்டுக்கு பின் டிஎம்பியின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உற்பத்தி துறையோ, சேவை துறையோ ஆரம்பித்த சில ஆண்டுகளில் நிதி திரட்டுதல்,பொதுப் பங்கு வெளியிட்டு நிதி திரட்டுவது நிறுவனங்களின் பொதுவாக வழக்கமாக உள்ளது. டிஎம்பியில் இதுவரை, குறிப்பிட்ட பங்குதாரர்கள் மற்றும் தேர்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை வைத்துள்ளனர். 102 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பொதுப் பங்கு வெளியிடுவதன் மூலம் டிஎம்பியின் பங்குகளை சிறு முதலீட்டளர்களும், சாதாரண மக்களும் வாங்க வாய்ப்பு உருவாகி உள்ளது.

நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட வங்கியாக திகழ்வதுடன், பரந்த அளவிலான வங்கி மற்றும் நிதி சேவைகளை முதன்மையாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs), மற்றும் விவசாய மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

கிராமம், பெரு நகரம் என நாடு முழுவதும், ஐநூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள், 1,150 ஏடிஎம் களுடன் செயல்பட்டு, அறுபது லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. வங்கி சேவை மட்டுமின்றி காப்பீடு, பரஸ்பர நிதி சேவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான வங்கியியல் மற்றும் நிதிசேவைகளை வழங்கி வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வங்கி சேவையை வழங்குகிறது

2021-22 ஆம் நிதியாண்டில் டி.எம்.பி, முந்தைய நிதியாண்டை விட 8.86 சதவீதம் வளர்ச்சியுடன், 78 ஆயிரத்து,424 கோடி ரூபாய் வர்த்தகம் புரிந்துள்ளது. வங்கி திரட்டிய வைப்புத் தொகை 44 ஆயிரத்து 933 கோடி ரூபாய், வங்கி வழங்கிய கடன் தொகை 33,ஆயிரத்து 491 கோடி ரூபாய். செயல்பாட்டு லாபம் 36 சதவீதம் வளர்ச்சியுடன் 1526.75 கோடி ரூபாயாகவும், நிகர லாபமும் 36 சதவீதம் வளர்ச்சி கண்டு, 821 கோடி ரூபாயாக உள்ளது. நிகர வாராக்கடன் 1.98 சதவீதத்திலிருந்து, 0.95 சதவீதமாக குறைந்துள்ளது.

 

பொதுப்பங்கு வெளியீடுக்கு முன்னதாக , மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் ,சோழ மண்டலம், பஜாஜ் அலையன்ஸ் உள்ளீட்ட 10 நிறுவனங்கள் எழுபத்து ஒரு லட்சத்து, 28 ஆயிரம் பங்குகளை , பங்கு ஒன்றுக்கு 510 ரூபாய் என்ற மதிப்பில், 363 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.

அடுத்ததாக ஒரு கோடியே, 58 லட்சம் பங்குகளை வெளியிடுவதன் மூலம் 831 கோடி ரூபாய் திரட்டப்படும். ஒட்டு மொத்தமாக இந்த பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் சுமார் 1200 கோடி ரூபாயை டி.எம்.பி திரட்டுகிறது.

இதனால் வங்கியின் மூலதனம் அதிகரித்து, வருங்காலத்தில் நிதி சவால்களை எதிர்கொண்டு, வலிமையான வர்த்தக வங்கியாக டிஎம்பி செயல்பட உதவும் என்கின்றனர் வங்கியாளர்கள்.

காலத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் நிறுவனம் வலிமையாக மாறும். அது போல் வங்கித்துறை வரலாற்றில் நீண்ட நெடிய அனுபவமிக்க, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு, இந்த பொதுப்பங்கு வெளியீடு இன்னுமொரு புதிய பரிணாமத்தை உருவாக்கும் என்பதே வங்கியாளர்களின் கருத்தாக உள்ளது.

-ரா.தங்கபாண்டியன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

22 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Halley Karthik

ரஷ்யாவின் தெருக்களில் உலா வரும் நீல நிற நாய்கள்!

EZHILARASAN D

மேலும் ஒரு பயணிக்கு ஒமிக்ரான் அறிகுறி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

EZHILARASAN D