முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி – அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

சென்னை திருவள்ளூரில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், டிசம்பர் மாத இறுதிக்குள் மின் பணிகள் முடிந்து விடும் என்றார். மின் உற்பத்தி வணிக ரீதியாக தொடங்கும் என தெரிவித்தார். அடுத்த ஆண்டில் 6 ஆயிரத்து 220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், அவை முதலில் இங்கு தான் மின் உற்பத்தி தொடங்கும் என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

கொதி கலன் விரைந்து அமைக்கப்பட்டு இங்கு மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, விரைவாக பணி முடிக்க முதல்வர் உத்தரவில் 2000 மெகாவாட் மின் தேவை கூடுதலாக உள்ளதாகவும்
தெரிவித்தார். ஊரனம்பேடு மின்நிலையம் அமைக்க விளை நிலங்கள் பாதிப்பு ஏற்படாமல் பேசி தீர்வு காணப்படும் எனவும் அவர் கூறினார்.

 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 143 டாலருக்கு குறைந்த விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளததாகவும், வடமாநிலங்கள் கூடுதல் விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்வதாகவும் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில் குறைகளை சுட்டிகாட்டுவது போன்று நிறைகளையும் மக்களுக்கு ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

316 துணை மின்நிலையத்தில் ஓராண்டில் 24 ஆயிரம் மின்மாற்றி மாற்றி அமைத்து மின்தட்டுபாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ஒருவாரகாலத்திற்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறிய அவர்,
மின்வாரியத்தில் 9 லட்சம் புகாரில் 99.4 சதவீதம் அளவு குறைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் சென்னையில் 500 மெகாவாட் மின்சாரம் தேவை உள்ளது என்றும் மின்வினியோக கட்டமைப்பு ஆய்வு செய்து இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக தலைவர் கூட நினைத்தால் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிவிடலாம்-டி.டி.வி. தினகரன்

Web Editor

போராட்டக் களத்தில் தங்குவதற்கு வீடுகளை கட்டிவரும் விவசாயிகள்!

Halley Karthik

விசாரணையை ஒத்திவையுங்கள் – அமலாக்கத்துறைக்கு ராகுல் கோரிக்கை

Mohan Dass