“தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி.!

தமிழ் ஊடகங்கள் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஊடக நண்பர்களுக்கு ஒரு குறிப்பு. பல வருட விவாதங்களுக்குப் பின் censor என்ற சொல்லை நீக்கச் சொல்லி இந்தியாவின் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம்.

Central board of film certification. சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல் தணிக்கை. தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். திரை உலகு வாதாடி மத்திய அரசை நீக்க வைத்தபின் அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம்.

கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக் கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும் தான்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.