திரைப்பிரலங்கள் குறித்த எனது பார்வையை மாற்றியவர் தமன்னா: மனம் திறந்த விஜய் வர்மா..!

திரைப்பிரபலங்களை பற்றிய எனது கருத்து, தமன்னாவை சந்தித்தப் பிறகு மாறியது எனவும், தமன்னாவின் அனுபவமும் நல்லது செய்யும் குணமும் சரியாக கணிக்கிற ஆற்றலும் எனக்கு மிகவும் உதவியது எனவும் நடிகர் விஜய் வர்மா தெரிவித்தார்.…

திரைப்பிரபலங்களை பற்றிய எனது கருத்து, தமன்னாவை சந்தித்தப் பிறகு மாறியது எனவும், தமன்னாவின் அனுபவமும் நல்லது செய்யும் குணமும் சரியாக கணிக்கிற ஆற்றலும் எனக்கு மிகவும் உதவியது எனவும் நடிகர் விஜய் வர்மா தெரிவித்தார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி இவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ மற்றும் சமீபத்தில் தமன்னா நடிப்பில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ,போலா ஷங்கர் ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றன.

நடிகை தமன்னா, பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமீப காலமாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்தது. இருவரும் கோவாவில் இந்த ஆண்டு புத்தாண்டு விருந்தில் கலந்துகொண்ட வீடியோ இணைய தளத்தில் வைரலானது. மேலும் மும்பையில் அடிக்கடி ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியானது.

பின்னர் அண்மையில் விஜய்வர்மாவை காதலிப்பது உண்மை என்று தமன்னா உறுதிப்படுத்தி உள்ளார். தற்போது விஜய் வர்மா ஆப்கானி ஸ்னோ, மர்டர் முபாரக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமன்னா பந்த்ரா, வேதா ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். ஆக்ரி சச் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து விஜய் வர்மா கூறியதாவது, “நான் சினிமா சம்பந்தப்பட்டவர்களை டேட்டிங் செய்யக்கூடாதென இருந்தேன். ஏனெனில் சினிமா ஆள்களை நினைத்து கோபமாக இருந்தேன். ஒரே தொழில் செய்பவர்களுக்கு அதன் விளையாட்டு, பணம் சம்பந்தப்பட்ட அனைத்தும் தெரியும். அது ஒரு மாதிரி இருக்குமென நினைத்திருந்தேன். ஆனால் தமன்னாவை சந்தித்தப் பிறகு எனது பார்வையே மாறியது.

தமன்னாவின் அனுபவமும் நல்லது செய்யும் குணமும் சரியாக கணிக்கிற ஆற்றலும் எனக்கு மிகவும் உதவியது. பல விஷயங்கள் குறித்து எனக்கு புதிய புரிதலை கொடுத்தது தமன்னா தான். நான் எதையாவது நினைத்து கவலை கொண்டிருக்கும்போது தமன்னா அது குறித்து புதிய விளக்கங்களை அளிப்பார்” இவ்வாறு கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.