தமன்னா பகிர்ந்த ”ஜெயிலர்” இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்: 10 லட்சத்தை கடந்த லைக்குகள்!

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகை தமன்னா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.…

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகை தமன்னா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா, மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

காவாலா பாடல் யூடியூபில் 8.4 கோடி (84மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் தமன்னாவின் நடனமும் அனிருத்தின் இசையுமென ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சென்னையில் ஜூலை 28-ம் தேதி ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்களை பதிவிட்ட புதிய புகைப்படங்கள் 22 மணி நேரத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் பெற்று வைரல் ஆகியுள்ளது. மேலும் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் ட்ரெண்டில் இருந்து வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.