டி20 உலக கோப்பை இறுதி போட்டி; மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

டி20 உலக கோப்பை இறுதி போட்டி இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், இரு அணிகளும் வெற்றியாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது…

டி20 உலக கோப்பை இறுதி போட்டி இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், இரு அணிகளும் வெற்றியாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் களம் காண்கின்றன.

இதுவரை இந்த இரு அணிகளும் தலா ஒரு முறை டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மைய தகவலின் படி இன்றைய போட்டியின் போது மழைக்கு அதிகபட்சமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

அவ்வாறு மழையால் போட்டி பாதிக்கப்பட்டால், ஐசிசி, நாளை அதே மைதானத்தில் போட்டியை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. ஒருவேளை இன்று போட்டி தொடங்கப்பட்ட பின் மழை பாதிப்பை ஏற்படுத்தினால், போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்படும்.

அதே சமயம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டு விளையாடி வரும் பொழுதும் மழை பெய்தால், எங்கு நிறுத்தப்பட்டதோ, அதே இடத்தில் இருந்து நாளைய தினம் போட்டி மீண்டும் தொடங்கப்படும்.

ஆனால் ஒருவேளை இந்த இரண்டு நாட்களும் மழையால் முற்றிலுமாக போட்டி நடத்தப்படாமல் தடைபட்டால், ஐசிசி விதிமுறைகளின் படி கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

அதாவது, 2022 டி20 உலக கோப்பை சாம்பியன்களாக இரு அணிகளும் கருதப்படுவர். இதுவரை எந்த உலக கோப்பையும் இதுபோன்று சமமாக வழங்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவ்வாறு நடைபெறாத வகையில் மழை தான் வெற்றியாளர்கள் யார் என தீர்மானிக்கும் முக்கிய பொறுப்பை பெற்றிருக்கிறது!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.