முக்கியச் செய்திகள்செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை முதல் போட்டி – கனடாவை வீழ்த்தி அமெரிக்கா அசத்தல் வெற்றி!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியில் கனடாவை வீழ்த்தி அமெரிக்கா அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை இன்று முதல் 29-ம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது.  இந்த தொடரில் இந்தியா உட்பட 20 அணிகள் பங்கேற்கிறது.  இதில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவுள்ளது.  குரூப் சுற்று, சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் என போட்டிகள் நடைபெற உள்ளது.  இந்திய அணி ‘குரூப்-ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.  இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் அங்கம் வகிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டி20  உலகக் கோப்பையின் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 182 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி 20ஓவர்களின் முடிவில் 9விக்கெட்களை இழந்து 122ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின. முதலாவதாக டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கனடா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஆரன் ஜான்சன் மற்றும் நவனீத் தலிவால் களமிறங்கினர். ஆரன் ஜான்சன் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க நவனீத் அரைசதம் கடந்த நிலையில் 61ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கனடா வீரர்களில் நிக்கோலஸ் கிர்டான் மற்றும் ஸ்ரேயஸ் முவ்வா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 20 ஓவர்களின் முடிவில் கனடா அணி 5விக்கெட்களை இழந்து 194ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 195ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணி களமிறங்கியது.

அமெரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்டீவ் டெய்லர் மற்றும் மோனக் படேல் ஆகியோர் களமிறங்கினர். ஸ்டீவ் டெய்லர் டக் அவுட் ஆகி வெளியேற இதனைத் தொடர்ந்து மோனக் படேலும் 16ரன்களுக்கு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஆரோன் ஜோன்ஸ் மற்றும் ஆண்டிரியஸ் கோஸ் அதிரடியாக விளையாடி ரன்களின் எண்ணிக்கையை மளமளவென உயர்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 17.4 ஓவர்களிலேயே 7விக்கெட் வித்தியாசத்தை இலக்கை எளிமையாக எட்டி முதல் வெற்றியை தன்வசமாக்கியுள்ளது அமெரிக்க அணி. ஆட்ட நாயகனாக 40 பந்துகளில் 94ரன்கள் விளாசிய ஆரன் ஜோன்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

திருச்செந்தூரில் இருந்து ஏப்.14ல் நடைபயணத்தை தொடங்குகிறார் அண்ணாமலை!

Jayasheeba

DeepFake புகார்களை பதிவு செய்ய புதிய இணையதளம் – மத்திய அரசு அறிவிப்பு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading