நான் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் – சுஷ்மிதா சென்

தான் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்ததற்கான காரணத்தை முதல் முறையாக நடிகை சுஷ்மிதா சென் வெளிப்படுத்தி உள்ளார். 1994ம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் கலந்து கொண்ட சுஷ்மிதா சென் அந்த போட்டியில்…

தான் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்ததற்கான காரணத்தை முதல் முறையாக நடிகை சுஷ்மிதா சென் வெளிப்படுத்தி உள்ளார்.

1994ம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் கலந்து கொண்ட சுஷ்மிதா சென் அந்த போட்டியில் வெற்றி பெற்று உலக அழகி பட்டதை பெற்றார். இந்தியாவிலிருந்து உலக அழகி பட்டத்தை வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார். பின்னர், நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு சுஷ்மிதாவை தேடி வந்தது.

சுஷ்மிதா சென் நடித்த முதல் திரைப்படமான தஸ்தக் , 1996ம் ஆண்டு வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை அப்படம் பெற தவறியது. அதே நேரத்தில் சுஷ்மிதா தமிழில் நடித்த ரட்சகன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.
தொடர்ந்து இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்திய சுஷ்மிதா சென்னுக்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது உள்ளிட்ட சில விருதுகள் கிடைத்தன. அதே போல அவர் நடித்த இந்தி திரைப்படங்கள் அதிக வசூலையும் குவித்தன. தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த சுஷ்மிதா சென் கடந்த 2000 மற்றும் 2010 ஆண்டு இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்த சுஷ்மிதா சென் தான் இதுவரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் குறித்து விவரித்துள்ளார்.
எனது வாழ்க்கையில் இருந்த சில மனிதர்கள் என்னை ஏமாற்றியதே நான் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் என குறிப்பிட்டுள்ள அவர், எனது வாழ்க்கையில் மூன்று முறை திருமணம் செய்யக்கூடிய சூழ்நிலை வந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் கடவுள் என்னைக் காப்பாற்றினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் நல்லது நடக்கும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

– தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.