சூர்யா 41 படத்தின் புதிய அப்டேட்

சூர்யா – பாலா கூட்டணியில் உருவாகி வரும் சூர்யா41 படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை…

சூர்யா – பாலா கூட்டணியில் உருவாகி வரும் சூர்யா41 படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் இயக்குனர் பாலா. இன்று வரை அவரது திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க முக்கிய காரணம் அவரது மேக்கிங் முறை தான். சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற திரைப்படங்கள் அதற்கு உதாரணம். நடிகர் சூர்யா முதல் முறையாக பாலாவின் இயக்கத்தின் நடித்து வெளியான திரைப்படம் நந்தா. இன்றுவரை சூர்யாவின் திரைப்படங்களில் சிறந்த படங்களின் பட்டியலில் நந்தா உள்ளது.

பாலா இயக்கத்தில் 18 ஆண்டுகள் கழித்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. தற்காலிகமாக சூர்யா41 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் படபிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சூர்யா உடன் கிருத்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் நடித்து வருகின்றனர்.

சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பாலாவின் 56-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு சூர்யா 41 படத்தின் அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா41 படத்தின் புதிய அப்டேட் வெளியாக உள்ளதை ரசிகர்கள் தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர்.

 

– தினேஷ் உதய் 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.