இன்று வெளியாகும் “சூர்யா 43” அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யா 43 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.            நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின்…

சூர்யா 43 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.           

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில்  விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் மாதவன் உள்ளிட்டவர்களும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படம் இதுதான். ஜி.வி.பிரகாஷுக்கு முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்ததும் இதே கூட்டணியில் உருவான ‘சூரரைப் போற்று’ படம்தான் என்பதால், இதற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
இந்நிலையில் இப்போது கங்குவா படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வரும் நிலையில் இந்த மாதத்தோடு முடியவுள்ள நிலையில், நவம்பர் மாதத்தில் சூர்யா சுதா கொங்கரா படம் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

https://twitter.com/2D_ENTPVTLTD/status/1716839466701320235

 

இந்நிலையில் இன்று சூர்யா 43 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை உறுதிப்படுத்துவது போல 2டி எண்டர்டெயின்மெண்ட் பக்கத்தில் சில பதிவுகளும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.