சூரியின் ‘மாமன்’: டிரெய்லர் வெளியீடு!

நடிகர் சூரி நடிப்பில் உருவாகி உள்ள ‘மாமன்’ பட டிரெய்லர் வெளியாகி உள்ளது.

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. தாய் மாமன் உறவை மையப்படுத்தி படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். இப்படம் வருகின்ற 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.