30 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

என்னது யூடியூபில் கமெண்ட் போட காசு குடுக்கனுமா?

Super Thanks சேவையை யாரெல்லாம் பயன்படுத்தலாம்? இதன்மூலம் எப்படி சம்பாதிக்கலாம்? என்பதனை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

படித்தவர் முதல் படிக்காதவர் வரை இன்று யூடியூபில் பணம் சம்பாதித்து வருகின்றனர். யூடியூப் பல வகைகளில் கிரியேட்டர்களுக்கு பணம் வழங்கி வருகிறது. கூகுள் ஆட்சென்ஸ் (Google Adsense) என்று சொல்லப்படும் கூகுள் நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு இணைய விளம்பர வருவாய் ஈட்டு அமைப்பில் இருந்து, கிரியேட்டர்களின் வீடியோவில் விளம்பரங்களை வைத்து அதில் கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட பங்கை கிரியேட்டர்களுக்கு வழங்குகிறது யூடியூப்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விளம்பரங்கள், Display ads, In-feed ads, In-article ads, Matched content, Link ads என பல பிரிவுகளில் கூகுள் ஆட்சென்ஸ் பிரித்து கொடுக்கப்படுகிறது. இந்த ஒவ்வொரு விளப்பரத்திற்கும் ஒவ்வொருவகையான கட்டணம் விளம்பரதாரர்களிடம் பெறப்பட்டு, குறிப்பிட்ட தொகை கிரியேட்டர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது யூடியூப் புதிய அப்டேட் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதற்கு Super Thanks என பெயரிடப்படுள்ளது.

கிரியேட்டர்களும் பார்வையாளர்களும் தொடர்ந்து, தொடர்பில் இருக்கவும் அவர்களிடம் இருந்து, வருமானத்தை பெறவும் உருவக்கப்படுள்ளதுதான் இந்த Super Thanks என சொல்லப்படுகிறது. இந்த சேவையை பார்வையாளர்கள் பயன்படுத்தி தங்களின் கருத்துகளை விரும்பிய வண்ணத்தில், விரும்பிய புகைப்படத்துடன் பதிவிடலாம் என கூறப்படுகிறது.

இந்த Super Thanks சேவை, YouTube Partner Program-ல் அங்கீகரிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதனை கிரியேட்டர்கள் தங்கள் பக்கங்களில் அனுமதிக்கும் போது பார்வையாளர்கள், கிரியேட்டர்களின் வீடியோக்களுக்கு குறிப்பிட்ட தொகை செலுத்தி அந்த வசதியை வாங்கலாம். இதன் மூலம் கிரியேட்டர்களை பார்வையாளர்கள் நேரடியாக அங்கீகரிப்பார்கள் என யூடியூப் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

யூடியூப் ஸ்டுடியோவில், Monetization பிரில் இணைக்கப்படுள்ள Super Thanks வசதியை தொடங்குவதன் மூலம் இந்த சேவையை எளிதில் பயன்படுத்தலாம். Super Thanks வசதியை On செய்தவுடன் கிரியேட்டர்களின் வீடியோக்களுக்கு கீழாக Super Thanks லோகோ இடம்பெறும்.

அதேபோல, யூடியூப் ஸ்டுடியோவில், Comments பிரிவில் Channel Comments & Mentions-ல் சென்று Super Thanks பயன்பாட்டாளர்களின் கமெண்ட்களை நாம் வடிவமைக்க முடியும். அவர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க முடியும் எனவும், யூடியூப் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

யூடியூப் ஸ்டுடியோவில், உள்ள Analytics பிரிவில் Revenue-ல் தனியாக Transaction Revenue என தனிப்பிரிவு இருக்கும் அதில் Super Thanks வழியாக கிடைக்கும் வருமானத்தின் முழு விவரமும் அதில் கொடுக்கப்படு இருக்கும். மேலும், தனித்தனி வீடியோக்களுக்கும் இதன் Analytics பார்க்க முடியும் என யூடியூப் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், Local sales tax, Applicable App Store fees போக, கிரியேட்டர்கள் 70% Super Thanks வருமானத்தை பெற முடியும் எனவும், கூகுள் ஆட்சென்ஸ் வழியாக இதனை பெற்றுகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Super Thanks-யை பயன்படுத்துபவர்கள் நிச்சயம் பயனுள்ள வீடியோவாக இருக்கிறதா என்பதனை எதிர்பார்ப்பார்கள் என தெரிவித்துள்ள யூடியூப். அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய நேரடியாக அவர்கள் என்ன எதிர்பார்கிறார்கள் என்பதனை கேட்கலாம் என தெரிவித்துள்ள யூடியூப். அதன்மூலம், பயன்பாட்டாளர்களை தொடர்ந்து தக்கவைக்க முடியும் என தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading