15வது ஐபிஎல்-ன் இன்றைய, 17-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
15-வது ஐபிஎல்-ன் 17-வது போட்டி மும்பையில் உள்ள பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் களம்கண்டன.
இதற்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் களம்கண்டது அதில், 9 பந்துகள் மீதமிருந்த நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது அதில், 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. அதில், 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், தொடர் தோல்விகளுக்கு பின் இன்றைய ஆட்டத்தில் வெற்றிமுகம் காணுமா சிஎஸ்கே அணி? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
அதேபோல, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் களம் கண்டது. அதில், 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது அதில், 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி வெற்றிவாகை சூடியது. தொடர் தோல்விகளுக்கு பின் இன்றைய ஆட்டத்தில் வெற்றிமுகம் காணுமா சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி? என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது. இதனால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 155 ரன்கள் இலக்காக அமைந்தது. அதனைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17.4 ஓவர் முடிவில், 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.








