சென்னையில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, வால் டாக்ஸ் சாலையில், மழைநீர் வடிகால் பணிகளுக்காக பல்வேறு தெருக்களிலும், சாலைகளிலும் தோண்டிய பள்ளத்தால் குண்டும் குழியுமாக சாலைகள் காட்சியளிக்கின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாமல் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளால், மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, மெட்ரோ கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல, கோடம்பாக்கத்தில் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் ஓராண்டுக்கு மேல் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் வடபழனி பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்து காட்சியளிக்கிறது. ஒரு கிலோ மீட்டர் சாலையைக் கடக்க சுமார் அரை மணி நேரம் ஆவதால் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் உரிய நேரத்தில் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








