இந்தியாவில் மீண்டும் உயரத் தொடங்கிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு உயரத்தொடங்கியுள்ளது.  நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 பேர் புதிதாக தொற்றால்…

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு உயரத்தொடங்கியுள்ளது. 

நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 71 லட்சத்து 22 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல 1 லட்சத்து 38 ஆயிரத்து 331 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 50 லட்சத்து 85 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் தொற்ற்றால் பாதிக்கப்பட்டவர்களில்  314 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 066 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை நாடு முழுவதும்  7,743 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.