சூடான் உள்நாட்டு சண்டை : 50 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தகவல்!

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே நடந்து வரும் மோதலில் சுமார் 50 லட்சம் போ் புலம்பெயர்ந்துள்ளதா ஐ.நா. தெரிவித்துள்ளது. அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான…

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே நடந்து வரும் மோதலில் சுமார் 50 லட்சம் போ் புலம்பெயர்ந்துள்ளதா ஐ.நா. தெரிவித்துள்ளது.

அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே காரணமாக கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் 4 முதல் 10 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சுமார் 50 லட்சம் பேர் இருப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச அகதிகள் நலப் பிரிவு தெரிவித்துள்ளதாவது. 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளதாகவும், 7.50 லட்சம் போ் சாவதேச நாடுகளுக்கு அகதிகாக சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.