முக்கியச் செய்திகள் தமிழகம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்; கம்யூனிஸ்ட், விசிக தலைவர்கள் மீதான வழக்கு ரத்து

புதிய வேளாண் சட்டங்களுக்க எதிராக போராடியதற்கு எதிராக சிபிஎம், விசிக உள்ளிட்ட தலைவர்கள் மீது போடப்பட்ட வழங்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதாக அறிவித்தது. இதன் மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அரசாங்கத்தால் ஒழுங்குப்படுத்தப்பட்ட மொத்த சந்தைகளுக்கு வெளியே வங்குபவர்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடியும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் இந்த சட்டத்தை, விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். கொரோனா தொற்று இடையேயும் இந்த போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. டெல்லியில் விவசாயிகள் முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வந்தன.

இதனையடுத்து தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தன.

இந்நிலையில் இந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து டெல்லியில் முகாமிட்டிருந்த விவசாயிகள், ஆதரவாளர்கள் தங்களது போராட்டங்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், 2019ல் சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனையடுத்து வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெண்களிடம் ஆபாசமாக பேட்டி… யூடியூப் சேனல் குழுவினர் 3 பேர் கைது!

Saravana

5வது வெற்றியை பதிவு செய்த குஜராத் டைட்டன்ஸ்

Arivazhagan Chinnasamy

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

Vandhana