முக்கியச் செய்திகள் தமிழகம்

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!

சென்னையில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டு பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனாவும் பரவி வரும் நிலையில் மக்கள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு கொரோனா காரணமாக, மெரினாவில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை, காசிமேடு, எண்ணூர் கடற்கரைகள் மூடப்பட்டு, பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேளிக்கை விடுதிகளில் இரவு 10 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி சென்னை முழுவதும் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 300 இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறையிலிருந்து வரும் 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு!

Nandhakumar

”மீண்டும் ஒருமுறை மோடி பிரதமரானால் இந்த நாடு என்ன ஆவது”- திருமாவளவன் எம்பி

Web Editor

உக்ரைன் – ரஷ்ய போர்: எரிபொருள் தட்டுப்பாடு

Halley Karthik

Leave a Reply