குழாய் வழி குடிநீர், கழிவறைகள் மற்றும் எல்பிஜி ஆகியவற்றை வீடுகளுக்கு வழங்குவதில் மாநிலங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை பார்ப்போம்.
கிழக்கு மாநிலங்களான பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகியவை கழிப்பறை வசதிகள் மற்றும் சுத்தமான சமையலைப் பயன்படுத்துவதில் மற்றவர்களை விட பின்தங்கியே உள்ளன.
1992- 93 மற்றும் 2019-21 க்கு இடைப்பட்ட காலகட்டங்களில் அத்தியாவசிய வசதிகளைக் கொண்ட குடும்பங்களின் பங்கை ஒப்பிட்டுப் பார்த்தால், மாநிலங்களுக்கு இடையே உள்ள அப்பட்டமான வேறுபாடுகள் வெளிப்படுகிறது.
கழிப்பறை வசதியைத் தவிர, வடகிழக்கு மாநிலங்களும் பல ஆண்டுகளாக இந்த வசதிகளில் பின்தங்கியே வருகின்றன. அதேசமயம், 1990களில் பின்தங்கியிருந்த தென் மாநிலங்கள், சுத்தமான எரிபொருளைப் பெறுவதில் மற்றவர்களை விட முன்னேறியுள்ளன.
குழாய்கள்/தண்ணீர் பம்புகள்/பாதுகாக்கப்பட்ட கிணறுகள் ஆகியவற்றிலிருந்து குடிநீரைப் பெறும் குடும்பங்களின் பங்கை எடுத்துக் கொண்டால், 1992-93 இல் 21% வீடுகளில் மட்டுமே இத்தகைய வசதிகள் உள்ளன. இருப்பினும், 2019-21 ஆம் ஆண்டில், கேரளா (94.5%) முன்னேறியிருக்கிறது, மணிப்பூர் (77%) அடுத்து உள்ளது.








