நாளை வெளியாகவுள்ள ‘ஸ்டார்’ திரைப்படம்! – ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த இயக்குநர்!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்டார்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இயக்குநர் இளன் ரசிகர்கள் அனைவரிடமும் நெகிழ்ச்சியுடன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.  ‘டாடா’ விற்கு பின் கவின் நடிக்கும் திரைப்படம்…

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்டார்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இயக்குநர் இளன் ரசிகர்கள் அனைவரிடமும் நெகிழ்ச்சியுடன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். 

‘டாடா’ விற்கு பின் கவின் நடிக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’.  இந்த படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை பிவிஎஸ்என் பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஸ்டார் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.  இத்திரைப்படத்தின் விண்டேஜ் லவ் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் வெளியான  ‘மெலோடி’ பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. படம் நாளை திரையரங்குளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் இளன் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

https://twitter.com/elann_t/status/1788510296958554399

இந்த படத்தை எனது தந்தை ஸ்டில்ஸ் பாண்டியனுக்கு அர்ப்பணிக்கிறேன்.

படத்தில் 3 மிகப்பெரிய சர்ப்ரைஸ் இருக்கிறது. படத்தை பார்க்கும் யாரும் அதை ரிவீல் செய்ய வேண்டாம். என்னுள் இருக்கும் கலைஞனை ரசிகர்கள் தாங்களாகவே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இவ்வாறு இயக்குநர் இளன் கூறியுள்ளார். இந்நிலையில், ராஜா ராணி படத்தில் நடிகர் ஜெய்யின் தந்தையாக நடித்த ஸ்டில்ஸ் பாண்டியன் தான் இயக்குநர் இளனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.