சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்று, தான் முதலமைச்சர் ஆனாலும், எப்போதும் மக்களில் ஒருவன் தான், என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்பின், உடற்பயிற்சிக் கூடம், சலவை மேடை, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார். பின்னர், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடிந்த மாணவிகளுக்கு, அவர் மடிக்கணினிகளை வழங்கினார். அப்போது பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்ததும், தமிழகம் முழுவதும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி அமைக்கப்படும், என உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக வெற்றிபெற்று, தான் முதலமைச்சர் ஆனாலும், எப்போதும் மக்களில் ஒருவன் தான், என்று தெரிவித்தார்.