Srilanka : அனுர குமார திசநாயக்க தலைமையில் புதிய அரசு… பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் தினேஷ் குணவர்தண!

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தண தனது பதவியை ராஜிநாமா செய்தார். இலங்கையில் கடந்த சனிக்கிழமையன்று 9வது அதிபர் தேர்தல் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக நீடித்த கடுமையான பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த மிகப்…

Srilanka : New government led by Anura Kumara Dissanayake...Dinesh Gunawardena resigned as Prime Minister!

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தண தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இலங்கையில் கடந்த சனிக்கிழமையன்று 9வது அதிபர் தேர்தல் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக நீடித்த கடுமையான பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, இலங்கை சந்தித்த முதல் தேர்தல் இது. இத்தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தலுக்கு முன்னரே ஜே.வி.பி., எனப்படும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதே போல் இந்த தேர்தலில் அவர் வெற்றிப் பெற்றார். இவர் அந்நாட்டின் புதிய அதிபராக இன்று பதவியேற்றார். இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்தண தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

குணவர்தண ஏற்கனவே தமது ராஜினாமா கடிதத்தை அதிபர் திசாநாயக்கவுக்கு அனுப்பியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 75 வயதான திரு குணவர்தன 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.