மண் குளியளில் ஆர்வம் காட்டும் இளசுகள்

முன்னோர்களின் மரபு வழி வந்த ஆரோக்கியமான வாழ்வியலை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த பூகாண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள மாணவர்களை ஒன்றிணைத்து இயற்கையாக அமைந்த கரையான்…

முன்னோர்களின் மரபு வழி வந்த ஆரோக்கியமான வாழ்வியலை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த பூகாண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள மாணவர்களை ஒன்றிணைத்து இயற்கையாக அமைந்த கரையான் புற்று மண்ணை, பவுடராக்கி அதில் சோற்றுகற்றாலை, மருதாணி, வேப்பிலை, எழுமிச்சம் பழம். குப்பைமேனி, செம்பருத்தி இலை போன்ற இயற்கை மூலிகை பொருட்களை தனிதனியாக அரைத்து, அதனை ஒன்றுடன் ஒன்று கலந்து உடலில் பூசி சிறிது நேரம் சூரியஒளியில் இருந்த பிறகு குளித்தனர்.

அவர்கள் இதுகுறித்து தெரிவிக்கும்போது, மண் குளியலில் ஈடுப்படுவதால் கோடைக்காலங்களில் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள், நிரந்தரமாக தீரும் எனவும், உடல் வெப்பத்தை தனிக்கும் எனவும், நோயற்ற வளமான வாழ்க்கைக்கு இது உதவும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், எதிர் வரும் காலங்களில் நாம் மறந்த பாரம்பரையத்தை பள்ளி மாணவர்கள் மூலம் மீட்டெடுக்கும் முயற்சியில் அங்குள்ள இளைஞர்களும், மாணவர்களும் ஈடுப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் இந்த செயல், அந்த கிராம மக்களின் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.