முக்கியச் செய்திகள் விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி

15வது ஐபிஎல்-ன் இன்றைய, 20-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

15-வது ஐபிஎல்-ன் 20-வது போட்டி வான்கேடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களம்கண்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதியது அதில் 61 ரன்கள் வித்தியாசத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் களம் கண்டது அதில், 23 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

அதன்பின்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் போட்டியிட்டது. அதில், 5 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

இதேபோல, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணி களம் கண்டது. அதில் 2 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

அதன்பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது அதில், 3 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதியது அதில் 12 ரன்கள் வித்தியாசத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. பின்னர், டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது அதில் 2 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளுக்கு 165 ரன்களை எடுத்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்காக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. இதனால், 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஈவ்டீசிங் விவகாரம்; போலீசார் விசாரணை

G SaravanaKumar

இந்தியாவில் 3.5 லட்சத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

EZHILARASAN D

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

Arivazhagan Chinnasamy